articles

உரிமைகளுக்கான கேரளத்தின் முழக்கம் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த குரலாகட்டும்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள மாநில அமைச் சர்கள், இடது ஜனநாயக முன்னணி யின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அனைவரும் பிப்ரவரி 8 அன்று புதுதில்லி யில் நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டம் மேற் கொண்டனர். கேரள மாநிலத்திற்கு ஒன்றிய பாஜக அரசாங்கம் பாகுபாடு காட்டும் அணுகுமுறையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும், கேரள மாநில அரசாங்கத்திற்கு உரிய நிதியை அளித்திடாமல் அதன் கழுத்தை நெரித்திடும் போக்கைக் கண்டித்தும் இவ்வாறு கிளர்ச்சிப் போராட்டத்தில் அவர்கள் ஈடு பட்டார்கள். அதே தினத்தன்று, தில்லியில் நடைபெற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, கேரளம் முழுவ திலும் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. பல மாநிலத் தலைநகரங்களிலும் கேரளாவுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து கூட்டங்கள் நடந்துள்ளன.   

பாதியாகக் குறைந்த  வருவாய்ப் பகிர்வு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவையும், நாட்டின் தலைநகரில் இத்தகைய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மோடி அரசாங்கத்தால் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதலால் உருவாக்கப்பட்ட நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது.

கேரளாவைப் பொறுத்தவரை, ஒன்றிய அரசாங்கம் அம்மாநிலத்தின் நிதி ஆதாரத்தைக் கடுமையாக வெட்டிக் குறைத்திருக்கிறது. வரி வருவாயில் பகிர்வைப் பொறுத்தவரை, கேரள மாநிலத்திற்கு அளித்த பங்கு (பத்தாவது நிதி ஆணையத்தின்போது) 3.875 விழுக்காடாக இருந்தது, இப்போது 1.9 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. மேலும், ஒன்றிய அரசாங்கம் மாநில அரசுகளுக்குத் தரக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே வரி வருவாய் இனங்களை செஸ் (cess) வரி என்றும் சர்சார்ஜ் (surcharge) வரி என்றும் மாற்றி விதித்துக்கொண்டிருக்கிறது. செஸ் வரி மூலம் 2011-12இல் வருவாய் 6.4 விழுக்காடாக இருந்தது. இப்போது 2021-22இல் அது 17.7 விழுக்காடாக, அதாவது 4,78,680 கோடி ரூபாய்களாக உயர்ந்தி ருக்கிறது. இவ்வாறில்லாமல் இவை வரிகள் மூலமாக வசூலிக்கப்பட்டிருந்தால், பின் மாநில அர சாங்கங்கள் கணிசமான பங்கினைப் பெற்றிருக்கும்.  

பொதுக் கடன் மாநில உரிமை, அதில் தலையிடுவது அதிகார மீறல்

அரசமைப்புச் சட்டத்தின் 293ஆவது பிரிவின்படி, மாநில சட்டமன்றங்கள் மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்பை நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம் பெற்றி ருக்கின்றன. மாநிலங்களின் பட்டியலில் உள்ள 43ஆவது பிரிவின்படி பொதுக் கடன் என்பது மாநி லங்களின் உரிமையாகும். இருந்தபோதிலும், ஒன்றிய அரசாங்கம், திறந்த சந்தை மூலம் கடன் வாங்குவது உட்பட அனைத்து விதங்களிலும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான உச்ச வரம்பை நிர்ணயிப்பதில் தலையிட்டுக்கொண்டிருக்கிறது.

மாநிலங்கள் நிதி சேகரிப்பதில் இவ்வாறு தாக்கு தல்கள் தொடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக, கேரள மாநிலத்திற்கு வரி வருவாயிலிருந்து வரும் பங்கு 3.82 விழுக்காட்டிலிருந்து  1.92 விழுக்காடாகக் குறைக்கப் பட்டு, மாநிலத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கி றது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை அளிக்காமல் நிறுத்திவைத்திருப்பது மற்றும் கடன் பெற முடியா மல் செய்திருப்பது ஆகியவற்றின் விளைவாக இந்த ஆண்டு சுமார் 57 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாநிலங்களின் பட்டியலில் கண்டுள்ள பிரிவுகளுக்கும் ஒன்றிய அரசு வழங்கும் திட்டங்களைத் திணித்திருக்கிறது. இந்தத் திட்டங்க ளின்மூலம் 2015-16ஆம் ஆண்டில் கேரளம் 85 விழுக்காடு திட்டங்களைப் பெற்றது. அதுவும்கூட இப்போது 2021-22இல் வெறும் 40 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இவற்றுடன், ஆளுநர் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான முறையில் செயல்பட்டு, சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமுன் வடிவுகளையெல்லாம் கிடப்பில் போட்டு வைத்திருந்து, பல்வேறு இடையூறு நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறார்.

கூட்டாட்சி முறையை ஒழிக்க முயலும் பாஜக ஆட்சி
இவ்வாறு பலமுனைகளிலும் ஒன்றிய அரசாங்கம் தாக்குவதற்கான காரணம், 2016க்கும் 2021க்கும் இடையே இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத் தின் ஆட்சிக்காலத்தில் அளப்பரிய முன்னேற்றம் ஏற் பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அதன் குரல் வளையை நெரிக்க வேண்டும் என்ற நோக்கமேயாகும்.  இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொள் கைகள் கேரளாவை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதை உணர்ந்தும், மக்களின் ஆதரவு அதற்கு நாளும் வளர்ந்துகொண்டிருப்பதை  அவதா னித்தும், மோடி அரசாங்கம் கேரளாவின் வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற நோக்கத்தோடு, இத்தகைய ஜனநாயக விரோத, கூட் டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய அணுகுமுறைக்குப்பின்னால் கூட் டாட்சித் தத்துவத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற மோடி அரசாங்கத்தின் மற்றும் பாஜக-வின் நோக்கம் இருக்கிறது.

ஒன்றியத்திலும் மற்றும் மாநிலங்களிலும், ‘இரட்டை என்ஜின்’ அரசாங்கமாக  பாஜக மட்டுமே ஆட்சி செய்தால்தான் மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மாநில மக்களின் நலனுக்கும் நல்லது செய்ய முடியும் என்று காட்டுவதற்காகவே இவ்வாறு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசாங்கம் அப்பட்டமான முறையில் பாகுபாட்டைக் காண்பித்து வருகிறது. இந்த வெட்கக்கேடான அரசியல் நோக்கத் திற்காக கூட்டாட்சித் தத்துவத்தின் சாராம்சத்தையே அழித்திடும் நடவடிக்கைகளில் பாஜக ஆட்சியா ளர்கள் இறங்கியிருக்கிறார்கள்.  

ஒற்றையாட்சி முறையை உருவாக்கும் முயற்சியின் பகுதி
தில்லியில் பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டம் கேரளாவின் விஷயம் மட்டுமல்ல. மாநிலங்களை அடிமைகளாக நடத்துவதற்கும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிராக நிதி சம்பந்தமான உறவுகளை ஓர்  ஆயுதமாகப் பயன் படுத்துவதற்கும் ஒன்றிய அரசாங்கம் குறியாக இருப்பதால் இவை எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களின் பிரச்சனைகளுமாகும். நிதி திரட்டும் நடவடிக்கைகளை மத்தியப்படுத்துவதற்கான நட வடிக்கைகள், ஓர் ஒற்றையாட்சி அமைப்புமுறையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியேயாகும். ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற முழக்கமும் இந்தி யாவை ஓர் ஒற்றையாட்சி அரசியலாக மாற்றுவதற் காக வடிவமைக்கப்பட்டதேயாகும்.

பிப்ரவரி 8 அன்று தில்லியில் நடைபெற்ற போராட் டத்தில் தில்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள், அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் சிங் மானும், ஜம்மு-காஷ்மீர்  முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியில் பங்கேற்றிருக்கும் எதிர்க்கட்சி களின் பல்வேறு தலைவர்களும் பங்கு கொண்டிருப்பது நன்று. தமிழ்நாடு முதலமைச்சர் போராட்டத்தை ஆதரித்து ஒரு காணொலி செய்தி அனுப்பியி ருக்கிறார். மாறாக, கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சி மட்டும் ஓர் எதிர்மறையான நிலையை எடுத்தி ருக்கிறது.

வரவிருக்கும் நாட்களில், மாநிலங்களின் உரிமை கள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்ப தற்கான போராட்டம் எதிர்க்கட்சியினரை அணி திரட்டும் குரலாக மாறிட வேண்டும்.

பிப்ரவரி 8, 2024, 
தமிழில் : ச.வீரமணி

;